லோன் மேளாவில் 2,333 பேருக்கு கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான லோன் மேளாவில், 2,333 பேருக்கு 133.77 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.

Update: 2024-02-25 05:47 GMT

லோன் மேளாவில் 2,333 பேருக்கு கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான லோன் மேளாவில், 2,333 பேருக்கு 133.77 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரையிலான காலகட்டத்திற்காக 2,333 பேருக்கு 133.77 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டது. திட்ட இலக்கீட்டை முழுவதுமாக அடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் 224.94 கோடி ரூபாய் கடன் பட்டுவாடா செய்யவேண்டி உள்ளது. கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாவட்ட இலக்க மேலாண்மை அலகு இணை இயக்குனர் சுந்தர்ராஜன், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் முருகேசன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் ரவி அனைத்து வங்கி மேலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News