உடற்பயிற்சி சிகிச்சை மையம் தொடங்க கடன் உதவி

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்ததுள்ளார்.

Update: 2024-01-20 16:38 GMT

மாவட்ட ஆட்சியர் 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். உடற்பயிற்சி சிகிச்சை (Physiotheraphy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ.6.00 இலட்சம் திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% அல்லது அதிகபட்சம் ரூ.2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News