உள்ளாட்சி தினம் - ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
நவம்பர் 1 தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்து அனைத்து ஊராட்சியிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் ஊராட்சியில் தலைவர் மல்லிகா கர்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் செந்தில் நாதன் வரவு -செலவு அறிக்கையை வாசித்தார். சிறப்பு அலுவலராக அமுதா கலந்து கொண்டார். குடி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நம்புதாளை ஊராட்சியில் தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் தலைமையில் ஜோனல் குணசுந்தரி முன்னிலையில் நடைபெற்றது. பல்லாக்கு ஒலியுல்லா தெரு செல்லும் பாதையில் பாலம் அமைப்பது, காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரங்காடு ஊராட்சியில் தலைவர் கார்மேல்மேரி செங்கோல் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. செயலர் சாந்தி வரவு-செலவு வாசித்தார். குடி தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.