வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-04-20 09:55 GMT

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் 1661 வாக்குசாவடிகளில் பதிவான வாக்குகள் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு அடுத்த எளையாம்பாளையத்தில் அமைந்துள்ள, வாக்குகள் எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இதனையடுத்து காலை, மாவட்ட ஆட்சியர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர் ச. உமா, தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பாதுகாப்பறையை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது முன்புற வாயிலில் காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல அரசியல் கட்சிகளின் முகவர்கள் கண்காணிப்புக்காக அரசியல் கட்சி சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கூறியதாவது.. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பொருத்தவரை 78.16 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது அதிகபட்சமாக சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளும் குறைந்தபட்சமாக நாமக்கல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளது 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பதிவான வாக்குப்பெட்டிகளை வைக்க இரண்டு மெயின் ஸ்ட்ராங் ரூம்கள் ஒரு கூடுதல் ஸ்ட்ராங் ரூம்,

எனஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பாதுகாப்பு அறைகள் உள்ளது262 cctv கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்ட்ரல் கண்காணிப்பு அறையில் 3 ஷிப்ட்டுகளில்கண்காணிப்பு பணிகள் நடத்தப்படும் ஜூன் 4ஆம் தேதி வரை வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு தொடரும் அரசியல் கட்சியினருக்குஅடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மானிட்டரிங் ரூம் உருவாக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும் போது நான்கு அடுக்கு பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஸ்ட்ராங் ரூம் வரை அரசியல் கட்சியினர் வர தேர்தல் நடத்தும் அலுவலர் தினமும்வரும்போது எழுத்து பூர்வமாகஅனுமதி பெற வேண்டும் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் உடன் வந்து ஸ்ட்ராங் வரும் வரை பார்வையிடலாம் என கூறினார். முன்னதாக செய்தி யாளர்களிடம் பேசிய பொது தேர்தல் பார்வையாளர் ஹர்குன் ஜித் கவுர் கூறியதாவது நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று,

அனைத்து சட்டமன்ற தொகுதியில் வாரியாக தனித்தனியாக வாக்குப்பதிவு கருவிகள்விவி பேடு கருவிகள்வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Tags:    

Similar News