லோக் அதாலத் : 274 வழக்குகளில் ரூ.9 கோடி இழப்பீடு

Update: 2023-12-13 06:12 GMT

தேசிய மக்கள் நீதிமன்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ் நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாதந்தோறும் ஓரு சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினரும் சமரசத்திற்கு உடன்பட்டால் நீதிபதி முன்னிலையில் வழக்கு கையாளப்பட்டு இதற்கான தீர்வு காணப்படும். இதன் மூலம் வழக்கு நிலுவைகளின் தேக்கம் வெகுவாக குறைந்து வந்ததால், மக்கள் கால தாமதத்தை தவிர்க்க இதை பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்/ முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி. மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின் பேரில் நேற்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி செம்மல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றம் நீதிபதி சிவஞானம் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, நீதித்துறை நடுவர் இனியா கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை கையாண்டனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு. வங்கி வாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும் பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் வட்டம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகள் மொத்தமாக 2,156 இதில் 274 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூபாய். 9,00,96,304/-க்கு வழக்குக்கு வழங்க தீர்வு காணப்பட்டுள்ளது.

Tags:    

Similar News