மக்களவை தேர்தல் - மாவட்ட எஸ்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையில் மக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Update: 2024-04-18 03:14 GMT

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினர்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள முன்னால் காவல்துறையினர், முன்னாள் இராணுவ வீரர்கள், ஊர்காவல்படையினர், தெலுங்கானா மாநில ஊர்க்காவல் படையினர், கேரளா மாநில போலீசார் ஆகியோருக்கு அவர்களுக்குரிய தேர்தல் பாதுகாப்பு பணியிடத்தை ஒதுக்கீடு செய்து பணிச்சான்று வழங்கியும், Sector Police Officers மற்றும் QRT Police Officers ஆகியோர்களுக்கு உரிய வாகனங்கள் (GPS பொருத்தப்பட்டும்) வழங்கப்பட்டும் அவர்களுடன் பணிபுரியவுள்ள காவல் ஆளிநர்களை ஒதுக்கீடு செய்து பணி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சோர்வின்றி பணிபுரிய காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார். மேலும் இம்மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற, ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு வெளிமாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் 265 காவல் ஆளிநர்களுக்கு தபால் ஓட்டும், 425 காவல் ஆளிநர்களுக்கு தேர்தல் பணிச்சான்றை (EDC) பயன்படுத்தி அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News