மக்களவை தேர்தல் பணி - முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாராளுமன்ற தேர்தல் 2024-ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தல் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அறை எண்.11-ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரிலோ அல்லது அலுவலக வேலைநாட்களில் 04365 299765 என்ற தொலைபேசி எண்ணிலோ தங்களது விருப்பத்தினை அளிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி . ஜானி டாம் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.