மக்களவை தேர்தல் : ஐஸ் கட்டிகள் மூலம் விழிப்புணர்வு

மக்களவை தேர்தலையொட்டி அல்லிநகரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐஸ் கட்டிகளை கொண்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது;

Update: 2024-04-11 11:33 GMT
விழிப்புணர்வு 

தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, கிராமிய நடனம், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், காய்கறி மற்றும் பழங்கள் மூலம் விழிப்புணர்வு, ஏடிஎம் மையங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், கடந்தமுறை வாக்குப்பதிவு குறைவான பகுதிகளை தேர்வு செய்து, வாக்களிக்க வேண்டி அழைப்பிதழ் வழங்குதல், 100 கி.மீ. விழிப்புணர்வு நடைபயண பேரணி, போன்ற பல்வேறு விதமான தேர்தல் விழிப்புணர்வு பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, இன்றையதினம் தேனி புதிய பேருந்து நிலையத்தில், புது முயற்சியாக 1500 கிலோ ஐஸ் கட்டிகளை கொண்டு MY VOTE MY RIGHT என்ற என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகம் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் இதனை பார்வையிட்டு, அனைவரும் 100% தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், ஐஸ்கட்டிகள் மூலம் வடிவமைக்கப்பட்டிருந்த வாசகங்கள் முன்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தூய்மை பணியாளுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதனை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News