பொள்ளாச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம்..
பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது அதனால் தான் தற்போது 6. முறைக்கு மேல் தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார் எப்படியாவது இரண்டாவது இடத்தை பிடித்திட வேண்டும் என்று மோடி நினைக்கின்றார் - பொள்ளாச்சியில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேச்சு.
Update: 2024-03-30 05:53 GMT
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினறும் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கனிமொழி பேசிய போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் தமிழகத்தில் எப்படியாவது இரண்டாவது இடத்தை பிடித்திட வேண்டும் என்ற ஆசையில் எப்போதும் வராத பிரதமர் இந்த ஆண்டில் மட்டும் ஆறு முறைக்கு மேல் வந்து தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார்.. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து டோல்கேட்கள் மூலம் நம்மிடம் வழிப்பறி செய்வது போல கொள்ளை அடிக்கின்றனர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து விடும் தமிழகத்தில் டோல்கேட்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும் மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாட்களாக உயர்த்தி 400 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் மத்திய அரசு கல்விக் கடன், ரத்து செய்யவில்லை விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை வழங்கவில்லை டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் விவசாயிகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இப்படி விவசாயிகளுக்கு எதுவும் செய்யாத மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 68,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். எந்த தவறும் செய்யாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், தொழில் நிறுவனங்களை பயமுறுத்தி ED, ID, CBI இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஒடுக்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்..