பாபநாசத்தில் ரூ.2.37 லட்சம் பறிமுதல்
பாபநாசம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-03-31 06:50 GMT
பணம் ஒப்படைப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி வீரமணி தலைமையில் காவலர் கார்த்திகேயன் மற்றும் குழுவினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கூத்தாநல்லூர் திருசக்தி முற்றம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை செய்தபோது ரூ.2 லட்சத்து 37,525 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அப்போது தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் அன்பரசி மண்டல துணை வட்டாட்சியர் தமயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.