தூத்துக்குடியில் 28 வேட்பாளர்கள் போட்டி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 

Update: 2024-03-31 02:48 GMT

வேட்பாளர் பட்டியல் வெளியீடு 

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து வரப்பட்டு 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. இதில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நேற்று 30.03.2024 பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, பிற்பகல் 3.00 மணி வரை 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 28 வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கினார்.

Tags:    

Similar News