வத்திராயிருப்பில்"உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டம்

வத்திராயிருப்பில்"உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டத்தில் கடைசி நேரத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களை நேரில் அழைத்து அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஆட்சியர் உறுதி.

Update: 2024-02-22 13:03 GMT
மாணவர்களுடன் உரையாற்றிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் மூலம் வத்திராயிருப்பு ஒன்றிய பகுதியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் வத்திராயிருப்பு பகுதியிலேயே இரவில் நாளையும் ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் கடைசி நேரத்தில் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் அழைத்து ஏன் கல்வி கற்க செல்லவில்லை என்றும் , உங்களது தேவைகளை கூறுங்கள் எனவும் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உறுதியளித்தார்.

பொருளாதார சூழலின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவியும், குடும்பத்திற்கு உதவித்தொகை உதவிகள், தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து இந்த ஆண்டு அவர்கள் 12 ஆம் வகுப்பு கட்டாயம் எழுத வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தி பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News