சாத்தான்குளம் அருகே கிரசர் மணல் ஏற்றி வந்ததாக லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி கிரசர் மணல் ஏற்றி வந்ததாக லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

Update: 2024-03-29 17:59 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை விலக்கில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியே வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் எந்த அனுமதி சீட்டும் இல்லாமல் திருட்டுத் தனமாக கிரசர் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து லாரியை பிடித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார் புகாரின் பேரில் தலைமை காவலர் கவிதா வழக்கு பதிந்தார். காவல் உதவி ஆய்வாளர்

நாகராஜன் விசாரணை நடத்தி லாரியை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர் நாசரேத் வெள்ளமடம் கொம்மந்தான் நகரைச் சேர்ந்த மூக்கன் மகன் மாயாண்டி (46) என்பவரை கைது செய்தார்.

Tags:    

Similar News