பூதப்பாண்டியில் லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதல் டிரைவர் படுகாயம் 

பூதப்பாண்டியில் லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம். போலீசார் விசாரணை.;

Update: 2024-02-20 06:30 GMT
விபத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்துள்ள தெற்கு அரசங்குடி பகுதியில் நேற்று மாலை நாகர்கோவில் இருந்து பூதப்பாண்டி நோக்கி போர்வெல் போடும் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டெம்போ நேருக்கு நேர் மோதியது. இதில் மின்கம்பங்கள்  உடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதில்  உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ  விசாரணை நடத்தினர். இதில் டெம்போ ஓட்டுநர் கடுக்கரை பகுதியை சேர்ந்த சுடலை ஆண்டி (38) பலத்த காயங்களுடன் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் போர்வெல் லாரியின் டிரைவர் கரூர் பகுதி மாரியப்பன் (28) என்பது தெரிய வந்தது. இது  குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News