கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-06 19:27 GMT

லாரி டயர் வெடித்து தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எண்ணூரிலிருந்து இரும்பு துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு ஒருக்காலைக்கு சென்று கொண்டிருந்தது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் லாரி மோதியது.

இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து லாரியிலிருந்து டீசல் கசிந்து தீ பிடித்து எரிந்தது. டீசலில் இருந்து தீ பற்றியதால் லாரியின் ஒரு பகுதி முழுவதும் மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் ஓட்டுனர் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

Tags:    

Similar News