ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம்: நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தற்கொலை

ஒசூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் ஒரே கயிற்றில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.;

Update: 2024-04-19 15:25 GMT
தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி

ஒசூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம்: நிறைமாத கர்ப்பிணி காதல் மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியை சேர்த்த விஜயகுமார்(27), கடந்தாண்டு சந்தியா என்பவரை காதலித்து,

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர் புதுமண தம்பதியாக சுற்றிவந்தநிலையில் சந்தியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

நாளை மறுநாள் பிரசவம் ஏற்படலாம் என மருத்துவர்கள் ஞாயிறன்று (21ம் தேதி) குறிப்பிட்டிருந்த நிலையில் இரண்டு குடும்பத்திலுடன் புதுவரவை வரவேற்க ஆவலாய் இருந்துள்ளனர், ஆனால் எதிரிக்கு கூட இதுப்போன்ற சம்பவம் வரக்கூடாது என நினைக்கும் வகையில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் வேலை பார்த்து வந்தநிலையில்,

Advertisement

ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்பட்டநிலையில் நேற்றிரவு கணவன்,மனைவி இருவரும் சாப்பிட்டு தூங்க சென்றநிலையில், இன்று காலை 11 மணி ஆனபோதும் படுக்கையறை கதவு திறக்கப்படாத நிலையில் சந்தியாவின் தாயார் படுக்கையறை கதவை திறந்தபோது நிறைமாத கர்ப்பிணி மகளும், மருமகனும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும்,

சோகத்தையும் ஏற்ப்படுத்தி உள்ளது.. இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிப்காட் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News