காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். பெண் வீட்டிற்கு வர மறுத்ததால் காவல் நிலையம் முன் தாய் கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-01-04 02:51 GMT

காதல் ஜோடி 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திக்குவாபாளையம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் நித்தியானந்தன் 23 இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் நாட்றம்பள்ளி அடுத்த திரியாளம் பகுதி சேர்ந்த மோகன் மகள் யுவராணி பிஎஸ்சி முடித்து உள்ளார். இந்த நிலையில் நித்யானந்தன் மற்றும் யுவராணி கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிய வர எதிர்ப்பு தெரிவித்தை தொடர்ந்து வீட்டிற்கு தெரியாமல் கடந்த 29ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரெட்டியூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.   இதன் காரணமாக இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பெண்ணின் தாயார் சூரியகலா தன்னுடன் வீட்டிற்கு வா என அழைத்த போது யுவராணி வர மறுத்ததால் காவல் நிலையம் வெளியே வந்து கீழே விழுந்து கத்தி கதறினார். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இதன் காரணமாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News