அன்பகம் மூத்த குடிமக்கள் இல்லத்தில் திமுக இளைஞரணி சார்பில் மதிய உணவு
Update: 2023-11-29 08:08 GMT
மதிய
உணவு வழங்கிய திமுகவினர்
திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,கெங்கவல்லி வட்டம் மஞ்சினியில் அமைந்திருக்கும் அன்பகம் மூத்த குடிமக்கள் இல்லத்தில் திமுக இளைஞரணி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. கெங்கவல்லி பேரூர்கழக செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் அருண்குமார், சத்யா செந்தில், ஹம்சவர்த்தினி குமார் மற்றும் செல்வகிளிண்டன், பாலசுப்பிரமணியம், கருப்பண்ணன், முத்துகிருஷ்ணன், சத்யராஜ், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.