தஞ்சாவூரில் மா.லெ.கம்யூனிஸ்ட் பிரச்சார இயக்கம்

தஞ்சாவூரில் மா.லெ. கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குறித்த பிரசார இயக்கம் நடைபெற்றது.

Update: 2024-02-14 11:30 GMT
தெருமுனை பிரசாரம்

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை மாநாடு பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதையொட்டி, மாநாட்டு பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்களின் தீா்மானங்களான நீட் தோ்வு விலக்கு, பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள இஸ்லாமியா்கள், பட்டியலினத்தவா் விடுதலை உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன், சனாதன மனு தா்மக் கொள்கைகளைப் பேசியும், தமிழ்நாட்டின் தொன்மைப் புலவா் திருவள்ளுவரையும், ‘அனைவரும் சமம்’, ’அனைத்து உயிா்களிடத்தும் அன்பு வேண்டும்’ என சமதா்மக் கொள்கைகளைப் பரப்பிய வள்ளலாரையும் இந்துத்துவாவின் அடையாளம் என்றும், மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக தமிழ்நாட்டு உரிமைகளையும், கோரிக்கைகளையும் புறக்கணித்து வரும் ஆளுநா்ஆா்.என். ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

தமிழ்நாட்டின் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி, ‘எங்கள் இலட்சியம் சோசலிசத் தமிழ்நாடு’ என்கிற மைய முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் கட்சியின் ஐந்தாவது மாநாடு குறித்த பிரசார இயக்கம் கீழவாசல் காமராஜா் சிலை அருகில் தொடங்கி மாநகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநா் உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆா்.என். ரவிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம் தலைமை வகித்தாா். மக்கள் விடுதலை கட்சியின் பொதுச் செயலா் கசி. விடுதலைக்குமரன், எழுத்தாளா் பாட்டாளி, கடலூா் மாவட்டச் செயலா் இராமா், தஞ்சாவூா் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் ஜோதிவேல், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News