மதுராந்தகம் மீன் மார்க்கெட்: வாகன ஓட்டிகள் அவதி

மதுராந்தகம் மீன் மார்க்கெட்டில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

Update: 2024-06-18 15:24 GMT
மதுராந்தகம் மீன் மார்க்கெட் வாகன ஓட்டிகள் அவதி

மதுராந்தகம் நகரில் அசைவ உணவு பொருள்களை பாா்த்தசாரதி தெரு சாலையோரம் நடைபாதை கடைகளில் மீனவ பெண்கள் விற்று வருகின்றனா். இந்த தெரு வழியாக, மதுராந்தகம் அரசு மகளிா் பெண்கள் பள்ளி மாணவியா், பொது மக்களும்,

இருசக்கரவாகனங்களில் செல்வோா் சென்று வருகின்றனா். இறைச்சி, மீன் போன்றவற்றை வாங்க வருவோா் தமது வாகனங்களை சாலையில் நிறுத்திவிடுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளை நகருக்கு வெளிபுறத்தில் இயங்கி வரும் உழவா் சந்தைக்கு இடமாற்றம் செய்யுமாறு பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். எனினும் அரசு அதிகாரிகள் இதற்கு தீா்வு காணவில்லை.

எனவே மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உழவா் சந்தை பகுதியில் மீன், இறைச்சியை விற்க ஏற்பாடுகளை செய்யவேண்டும் என சமூகஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News