மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணி தீவிரம்

மதுராந்தகம் ஏரியை ரூ.163 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2024-06-30 05:45 GMT

 சீரமைக்கும் பணிகள்

மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும். ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்களும் என, மொத்தம் 7,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியில், 120 கோடி ரூபாய் நிதியில், துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை சீரமைத்தல், கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைத்தல் ஆகிய பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

Advertisement

தற்போது கூடுதலாக, 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏரிக்கரை பலப்படுத்துதல், கலங்கல்கள், மதகுகள் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நடைபெற்று வந்ததால், பருவமழை காலத்தில் நீர் தேக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு பருவமழைக் காலத்திற்குள் பணிகளை முடித்து, நீர்த்தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஏரியிலிருந்து கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கிளியாற்றில், நீர் விரைந்து செல்லும் வகையில், ஆற்றின் கரைகள் பலப்படுத்துதல், உட்பகுதியில் உள்ள புதர்களை அப்புறப்படுத்தி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags:    

Similar News