பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.;
Update: 2024-03-16 04:47 GMT
பங்குனி திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பரக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல் நாள் விழாவை ஒட்டி நேற்று காலை திருக்கொடி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ தலைமையில் திருக்கொடி ஏற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மரப்பாணி பூஜை, உற்சவ பிலி, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழா 23ஆம் தேதி திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி காலை 7:30 மணிக்கு மேல் நடக்கிறது. பத்தாவது நாள் 24ஆம் தேதி சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டுத்துறைக்கு எழுந்தருளல் மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது. இரவு 12 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.