மதுரை சிபிஐஎம் வேட்பாளர் பேட்டி
மதுரையின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் ஒரு புதிய இந்தியா ஆட்சி அமைக்கும் என மதுரை சிபிஐஎம் வேட்பாளர் பேட்டி அளித்தார்.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரும் மதுரை எம்பியுமான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு. வெங்கடேசன் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்நிலையில் உள்ளார். வாக்கு என்னும் மையத்திற்கு வந்த அவரை மாலை அணிவித்து, சால்வை கொடுத்து, தாரை தப்பட்டை உடன் வரவேற்றனர். தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது: மதுரையில் இந்தியா கூட்டணி வேட்பாளரான எனக்கு 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி மதுரை மக்கள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உறுதியான அரசியல் வெளிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஐந்தாண்டு காலம் நாங்கள் செய்த சேவைக்கு கிடைத்த வெற்றி. மதுரையின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். ஒரு புதிய இந்தியா ஆட்சி அமைக்கும். மதுரை தொடர்ச்சியாக இடதுசாரி அரசியல் களம். மதுரையில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. உணர்ச்சி பூர்வமான மகத்தான தலைவர்கள் மற்றும் தோழர்களின் சேவைக்காக மக்கள் தருகிற பரிசாக கருதுகிறோம்.