கருப்பசாமி வேடமணிந்து கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி நேர்த்திக்கடன்
மதுரை சித்திரை திருவிழாவில் கருப்பசாமி வேடமணிந்து கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.;
Update: 2024-04-24 02:35 GMT
வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவில் சித்ரா பொளர்ணமியான நேற்று வைகையாற்றில் கள்ளழகர் தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளினார். கள்ளழகரை வெள்ளி குதிரையில் வீரராகவ பெருமாள் வரவேற்றார். லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷம் விண்ணதிர எழுந்தது. இந்த நிலையில் கள்ளழகரை தரிசனம் செய்ய மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்தும் சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், திருச்சி, கோயமுத்தூர் ஓசூர். என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்த பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பம். குடும்பமாக மக்கள் வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் பக்தர்கள் விரதம் இருந்து அழகர் கருப்பசாமி போன்ற வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.