மதுரை மீனாட்சி ரோட்டரி சங்க துவக்க நாள் விழா

மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கத்தின் துவக்க நாள் விழா நடைபெற்றது.

Update: 2024-05-09 03:47 GMT

2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கத்தின் துவக்க நாள் விழாவும், மதுரை மருத்துவக் கல்லூரி / அரசு இராசாசி மருத்துவமனை முதல்வரும் இச்சங்க உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவருமான டாக்டர் ரத்தினவேல் பணி நிறைவு பாராட்டுவிழாவும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, முன்னாள் ரோட்டரி ஆளுநர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இத்தனை ஆண்டு காலமாய் சங்கத்தை நல்ல முறையில் நடத்தி, தனது சமூக சேவைகளாலும் செயல்பாடுகளாலும் ரோட்டரி மாவட்டம் 3000 ல் தனக்கென ஒரு தனி இடத்தை மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கம் பெற்றுள்ளது என்று வாழ்த்தி பேசினார். தென் தமிழகத்திலேயே முதன் முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, குறிப்பாக கொரோனா காலத்திலும் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வராக டாக்டர் ஆ. ரத்தினவேல் மிகச் சிறப்பாகப் பணியாற்றி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல பெயர் பெற்ற சங்க உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவருமான டாக்டர் ரத்தினவேலை மீனாட்சி ரோட்டரி சங்கத்தின் அனைத்து முன்னாள் தலைவர்கள் செந்தில்குமாரி, வசுமதி, சாந்தாராம், டாக்டர். குருசுந்தர், ராம் சுந்தர், சீனிவாசன், தவசுமுத்து, தம்புராஜ், முத்துக்குமாரசாமி மற்றும் துளசிராமன் டாக்டர் ரத்தினவேலுவை பாராட்டி, அவரது பணி ஒய்வுக்காலம் அவருக்கு மகிழ்ச்சியாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் டாக்டர் தினேஷ் குமார் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News