காவலர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர்

மதுரையில் 12.480 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.;

Update: 2024-02-03 14:13 GMT

காவலர்களை பாராட்டிய கமிஷனர்

மதுரை மாநகரில் போதை பொருள் கஞ்சா குட்கா தடுப்பு நடவடிக்கையில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை மாநகர போலீஸ் சார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு 12.480 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அடிப்படை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் புகையிலை தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வெகுமதியை வழங்கினார்.

குறிப்பாக சார்பு ஆய்வாளர் ஆதிராஜா,முதுநிலை காவலர்கள் ராஜேஷ்,முத்து குமாரராஜா மற்றும் நுண்ணறிவு பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துராமன்,சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்களை மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News