நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டிடத்திற்கு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல்

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் புதியதாக நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டடம் கட்டும் பணிக்கு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் பூஜை செய்தனர்.

Update: 2024-01-22 10:21 GMT

நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டிடத்திற்கு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் 

சென்னை மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-146, ஆலப்பாக்கம், கணபதி நகர், யூனியன் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டடம் கட்டும் பணிக்கு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி அடிக்கல் பூஜை செய்தனர். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன். பகுதி துணை செயலாளர் தீ.பாலாஜி, வட்ட கழக செயலாளர் M.ரூபன், மாவட்ட பிரதிநிதி P.சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News