அச்சரப்பாக்கம் வஜ்ஜிரகிரி மலை மீது மகா தீபம்

Update: 2023-11-27 07:02 GMT
 மகா தீபத்தை  ஏற்றி வைத்த திமுக எம்பி, டிஎஸ்பி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஶ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரன்று தீபம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி மகா தீப பெருவிழாவிற்கு வஜ்ஜிரகிரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை மின்விளக்குகளாலும், மலர்களாலும்,மங்களப் பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை விநாயகர், பசுபதீஸ்வரர், மரகதாம்பிகை, முருகபெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு மூல தீபம் அச்சரபாக்கம் நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்து மலை கோயிலுக்கு வந்தடைந்தது. மாலை 6 மணிக்கு கோயிலின் எதிரே வைக்கப்பட்டிருந்த மகா கொப்பரையில் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் வாசிக்க சிவாய நம, சிவாய நம என பக்தர்கள் முழுங்க மகா தீபத்தினை மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி, ஆகியோர் மகா தீபத்தினை ஏற்றி வைத்து வழிபட்டனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தினை வழிபட்டு சென்றனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் தேவராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News