நன்னியூரில் மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

நன்னியூரில் மகா கணபதி,தம்பிகலை சுவாமி பரிவார தெய்வங்கள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-06-16 14:00 GMT

நன்னியூரில் மகா கணபதி,தம்பிகலை சுவாமி பரிவார தெய்வங்கள் கோவிலில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா நன்னியூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி தம்பி கலை சுவாமி மாயவன் பெருமாள் கன்னிமார் குதிரை வாகனம் மகாமுனிஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது.

பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் யாக மந்திரங்கள் உச்சாடனம் செய்து, புனித நீர் பூஜிக்கப்பட்டது. யாக வேள்வி முடிந்த பிறகு புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நன்னியூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News