மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாநாளை மறுநாள் நடக்கிறது.
சேலம், நெத்திமேட்டில் பிரசித்தி பெற்ற தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அஷ்டபந்தனம், திரவிய ஹோமம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
காலை 9 மணிக்கு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்த குடங்கள் சகல வாத்தியங்கள் முழங்க குமரகவுண்டர் தெருவில் உள்ள மகா சக்தி வியாகர் கோவிலில் இருந்து குதிரை, பசுவுடன் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு முதற்கால யாகபூஜை, நாளை (சனிக்கிழமை) மாலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் கோபுர கலசம் வைத்தல், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம், தங்ககவச அலங்காரம், தசதரிசனம், தசதானம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி ஊர்வலம் நடக்கிறது. மேலும் மகா காளியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு மாசி திருவிழா பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.