கருப்பணசாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா !!
நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியம் புது ஆவிளிப்பட்டியில் செல்வவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 09:07 GMT
கும்பாபிஷேக விழா
நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியம் புதுஆவிளிப்பட்டியில் செல்வவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 2ம், 3ம், 4ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.