திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

போரில் வெற்றி பெற ராணுவ வீரர்களால் கட்டப்பட்ட திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-10-26 13:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுகா சின்ன வடுகன்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல வரலாறு மிக சிறப்பு வாய்ந்ததாது.

சின்ன வடுகன்தாங்கல் கிராமத்தில் 90 சதவிகித நபர்கள் இந்திய ராணுவத்தில் பணி புரிகின்றனர் ராணுவத்தில் பணி புரியும் ராணுவ வீரர்கள் போர் நடக்கும் பொழுது போரில் வெற்றி பெறவும் போரில் வீரர்களுக்கு ஆபத்து எதுவும் நடைபெறாமல் இருக்கவும் இந்த ஆலயம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த ராணுவ வீரர்களால் கட்டப்பட்டது.

தற்போது இந்த ஆலயம் மிகவும் பழமை அடைந்ததால் தற்போதுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி நிதி அளித்து கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடத்தினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இந்திய நாடு எப்பொழுதும் போரில் வெற்றி பெறவும் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக திரௌபதி அம்மன் இருக்கவேண்டிய இறைவனை வேண்டிக்கொண்டு வணங்கினர்.

Tags:    

Similar News