மாரியம்மன் கோவிலில் ஏழு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா

ஆத்தூர் அருகே ஓலப்பாடியில் விநாயகர், மாரியம்மன் கோவிலில் ஏழு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

Update: 2024-07-04 05:06 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஓலப்பாடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் புதிதாக புறனமை க்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் மேலும் அந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் பஜனைமடம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மதவடியான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், மகாபூர்ணாகதி, புண்ணியாவாசனம் செய்யப்பட்டு அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து மகாதிபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை முதல் கால இரண்டாம் கால யாகா பூஜை தொடர்ந்து இன்று மூன்றாம் கால நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது,

பின்னர் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி மேளதாளங்கள் ழுழங்க வானவேடிக்கையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் 7 கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓலப்பாடி ஒட்டப்பட்டி ஆரியபாளையம் களரம்பட்டி பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசித்தனர்.

Tags:    

Similar News