ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குடியாத்தம் அடுத்த கூடநகரம் குள்ளப்ப நகரில் அமைந்து உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்.
Update: 2023-12-16 04:59 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் சாலையில் உள்ள குள்ளப்ப நகரில் அமைந்து உள்ள ஸ்ரீ செல்வகணபதி,ஸ்ரீ முனீஸ்வரர்,ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ கன்னியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் அதிவிமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைத்து பட்டு வஸ்திரங்கள்,நவ தானிய வகைகள்,மலர் வகைகள்,பழ வகைகள்,மூலிகை பொருட்கள்,வாசனை திரவியங்கள்,உள்ளிட்டவை கொண்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழுங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது இதில் மகாதேவமலை ஸ்ரீஸ்ரீ மகானந்த சித்தர்,பொய்கை ஸ்ரீலஸ்ரீ வராகி தாசர் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்து புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு தீப ஆராதனை செய்தனர் பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டனர். இதில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு வந்த சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் . மேலும் பக்தர்களுக்கு 5 வகையான உணவினை அன்னதானமாக வழங்கப்பட்டது இதில் தாழையாத்தம் பஞ்சாயத்து தலைவர் அமலுஅமர்,கோயில் நிர்வாகி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.