காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் 2021 டிசம்பரில் பாலாலயம் நடந்த நிலையில், வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

Update: 2024-02-14 05:48 GMT


அஷ்டபுஜ பெருமாள் கோவிலில்  வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் அஷ்டபுஜ பெருமாள் கோவிலானது பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இருவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. இக்கோவிலில் இதற்கு முன் 1982, 2003 ஆகிய ஆண்டுகளில் திருக்குடமுழுக்கு நடந்துள்ளன. இந்நிலையில் இத்திருக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, 2021 டிசம்பரில் பாலாலயம் நடந்த நிலையில், வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி வரும் 23ல் யாகசாலை பூஜை துவங்க இருக்கிறது. இதுகுறித்து அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.கே.பி.எஸ்.சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ரா.கார்த்திகேயன் கூறியதாவது: அஷ்டபுஜ பெருமாள்கோவில் முழுதும் கருங்கல் தரை அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

பாதுகாப்பு கருதி கோவில் முழுதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில் திருக்குளம் முழுதும் சீரமைக்கப்பட்டு, நுழைவாயிலில் பெருமாளின் தசாவதாரம் மற்றும் ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள் திருஉருவ சிற்பங்கள் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News