வாழவந்த அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
மந்திரி ஓடை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாழவந்த அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;
கும்பாபிஷேகம்
விருதுநகர் மாவட்டம் மந்திரி ஓடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், ஆச்சாரிய அழைப்பு, கும்ப பூஜை, புண்யாஹவசனம், பூர்ணாஹீதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.
இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் வரப்ப்பட்டு முதலில் விநாயகர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று . அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோச்சனம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு பின்னர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு கிராமத்தின் சார்பாக உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது..