குபேர கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் ஸ்ரீ குபேர கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.;
Update: 2024-03-19 09:48 GMT
பால்குடம் ஊர்வலம்
தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் தேவராஜ் தெரு ஸ்ரீ குபேர கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் சாலை வழியாக பால்குட ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மருத் சந்திரஹணம், அங்குறார்ப்பணம், ரக்க்ஷா பந்தனம், பிம்பகலாகர்சனம் முதல் காலாக பூஜை வேதபாராயணம் பூனாகிது தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை காலை ஒன்பது மணி முதல் 10 மணி வரை ஶ்ரீ குபேர கணபதிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருமாள், அருள் மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.