மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா
கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் - ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.;
Update: 2024-03-21 06:07 GMT
அக்னி வசந்த உற்சவ பெருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா 125 அடியில் துரியோதனன் படுகளம் வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழா 24 ஆண்டுகளுக்குப் பிறகு துரியோதனன் படுகளம் திருவிழா நடைபெற்றது. கீழ்பாலூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டு களித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வை கீழ்பாலூர் ஊர் முக்கிய பிரமுகர்களும் விழா குழுவினர்களும் மற்றும் இளைஞர்கள் தலைமையில் நடைபெற்றது . இவ்விழா முடிவில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது