ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் ஆலயத்தில் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்
குத்தாலம் ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றற நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்;
Update: 2023-12-27 08:53 GMT
குத்தாலம் ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் ஆலயத்தில் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தேவாரப் பாடல் பெற்ற தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் கோயில் உள்ளது. காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டியபோது சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 26 ஆம் தேதி காலை ருத்ரஹோமம், பாராயணம் பூர்ணாகுதி ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் 1008 சங்காபிஷேகம், ஸ்ரீ ஆனந்தவள்ளிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஸ்ரீ நடராஜர் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், தேன் உள்ளிட்ட சகல விதமான திரவியங்களால் மகாபிஷேகம் புஷ்பாஞ்சலி தீபாராதனை நடைபெற்றது.