மகாசக்தி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தில் உள்ளது, அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் கோயில். இக்கோயில் திருவிழா கடந்த 10- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. 22-ஆம் தேதி முனியப்பன் செய்தல் நிகழ்ச்சி மற்றும் பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
24-ஆம் தேதி காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அலகு குத்தியும், தலைமீது தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு படைத்து வழிப்பட்டனர். 25-ஆம் தேதி தேர் இழுத்தல் நிகழ்ச்சி, பம்ப வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடந்தது.
இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று 26-ஆம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் கோயில் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.