மகா சிவராத்திரி : நான்கு அலங்காரத்தில் கருநெல்லிநாதர் காட்சி

சிவகாசி அருகே திருத்தங்கல் கருநெல்லிநாதர் திருக்கோவிலில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-10 03:18 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மிகவும் பிரசித்தப்பெற்ற திருத்தங்கல் கருநெல்லிநாத, அம்பிகை திருக்கோவிலில் மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.முன்னதாக சிவ பக்தர்களின் பஜனையுடன் ஆரம்பிக்கப்பட்ட பூஜைகள் நேற்று முன்தினம்  இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடைப்பெற்றன.

அய்யன் சிவனுக்கு 4 கால பூஜையில் ஒவ்வொறு கால பூஜையிலும் சிவனுக்கு பால்,தயிர்,இளநீர், மஞ்சள்,விபூதி,சந்தனம் மற்றும் வாசன திரவியங்களுடன் அபிஷேகம் நடைப்பெற்றன. சந்தனம்,அன்னம் ஆகிய நான்கு கால பூஜையில் ஒவ்வொரு அலங்காரத்தில் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டு பஞ்சதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.இன்று அதிகாலை அன்னம் மற்றும் தாமரை மலர்களால் அலங்காரத்தில் நடைப்பெற்ற நான்காம் பூஜையை காண சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யன் சிவனை தரிசனம் செய்தனர்.

மேலும் நடைப்பெற்ற ஒவ்வொறு கால பூஜையில் பக்தர்களுக்கு சக்கரை பொங்கல்,தேங்காய் மற்றும் லெமன்,புளியோதரை போன்ற சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி சிறப்பாக செய்திருந்தனர்..

Tags:    

Similar News