நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அனுப்பும் முகாம்
Update: 2023-11-19 07:47 GMT
நீட் ரத்து கையெழுத்து முகாம்
விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி முன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி போஸ்ட் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். நகர இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், நகர பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பாளர் புஷ்பராஜ், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் முருகன், கனிராஜ்,அய்யப்பன், லட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கையெழுத்து பெற்றனர். நகர துணை அமைப்பாளர் பொன்னையன் நன்றி கூறினார்.