மக்காச்சோள மகசூல் பாதிப்பு; வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
தலைவாசல் அருகே மக்காச்சோள மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகில் உள்ள லத்துவாடி கிராமத்தில் மழையின்றி மக்காச்சோளம் மகசூல் பாதிக்கப்பட்டதால் வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தலைவாசலை அடுத்த லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் லத்துவாடி கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தோம். பயிருக்கு உரம், மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் மக்காசோளம் பயிரில் பூ வரும் பருவத்தில், போதிய மழை பெய்யவில்லை.
இதனால் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் கடும் உழைப்பில் ஈடுபட்டும், கடன் வாங்கியும் உரிய செலவுகளை செய்துள்ளனர். ஆனால் பயிர்சாகுபடி செலவுக்கு கூட ஈடாகவில்லை. போதிய விளைச்சல் இல்லாமல், விவசாயிகள் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றனர்.