திருச்சி : மக்களுடன் முதல்வர் முகாம் - ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், எடைமலைப்பட்டி புதூர் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-06 04:49 GMT

எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்

அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் தோறும் இந்த முகம் நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் குடிநீர் கழிவு நீர் இணைப்பு பிறப்பு இறப்பு சான்றிதழ் திடக்கழிவு மேலாண்மை காலி மனை வரிவிதிப்பு சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை உள்ளிடவை தொடர்பாக மக்கள் மனு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 28, 29 ஆகிய வார்டுகளுக்கு “மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், ஜாகிர் உசேன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி ஆரங்கள் அமைக்கப்பட்டிருந்தன இந்த முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற மேயர் தெரிவித்தார்.

Tags:    

Similar News