கீரிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பேரூராட்சியில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்

Update: 2023-12-29 01:35 GMT

மக்களுடன் முதல்வர் திட்டம்

தம்மம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் குரணி கரடு என்ற இடத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. முகாமை தாசில்தார் வரதராஜன் தொடங்கி வைத்தார். கீரிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடாசலம், தலைவர் தேன்மொழி காங்கமுத்து மற்றும் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி சமதர்மன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கிருத்திகா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் 13 துறைகளைச் சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. இதில் பட்டா மாறுதல், வீட்டு வரி, பெயர் மாற்றம், மின்சார பெயர் மாற்றம், மின் இணைப்பு. பிறப்பு-இறப்பு சான்றிதழ், இலவச பட்டா வழங்குதல் குறித்த மனுக்களை அளித்தனர். இதில் மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News