மயிலாடுதுறையில் மக்களுடன் முதல்வர் முகாம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்;

Update: 2023-12-28 08:42 GMT
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்ந மக்களின் முதல்வர் சிறப்பு முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி வருகின்றனர். இன்று மயிலாடுதுறை கூறைநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மயில்வார்டு எண் 27, 30, 31, 32, 33, 34 ஆகியவற்றை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் கண்மணி தலைமையில் நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி முருகன், விஜய், சபரிஇலக்கியா, கீர்த்திகா இளங்கோவன்,சுதா முரளி, கார்த்தி, நடராஜன் உட்பட பல்வேறு நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். முகாமுக்கு வந்தவர்கள் மருத்துவ சோதனை செய்து கொண்டனர், தொடர் சிசைக்கு நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News