மக்களுடன் முதல்வர் முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

விருதுநகரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்

Update: 2023-12-29 01:28 GMT
மக்களுடன் முதல்வர் முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி நூற்றாண்டு மண்டபத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருவில்லிபுத்தூர் நகராட்சி திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை கோயம்புத்தூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.

இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, இன்று இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் நகராட்சிகளில் இன்று “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். “மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் 20.12.2023 முதல் 30.12.2023 வரை 9 நாட்கள் (24.12.2023 மற்றும் 25.12.2023 தவிர்த்து) நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News