மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்
Update: 2024-01-05 06:51 GMT
கருங்குழி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் நேரில் சென்று ஆய்வு! செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி கருங்குழி தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு மக்கள் தங்களின் குறைபாடுகளை கோரிக்கை மனுக்களாக துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். இதில் வருவாய் துறை உள்ளாட்சி துறை ,சுகாதாரத்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என 13 துறையை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களின் குறைக்கான கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த முகாமில் பேரூர் செயல் அலுவலர் அருள்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.