மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் அறிவிப்பு

தாம்பரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதற்கான நாட்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2023-12-31 09:30 GMT
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் அறிவிப்பு

அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜன. , 3ம் தேதி, தாம்பரம் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் அடங்கிய, 9, 13, 14, 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு குரோம்பேட்டை, ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. நான்காவது மண்டலத்தில் அடங்கிய 32, 33, 49, 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளுக்கு, மேற்கு தாம்பரம், அம்பேத்கர் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

ஜன. , 4ல், 5, 6, 7, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகளுக்கு பம்மல் எல். சி. , மஹால்; ஜன. , 5ல், 1, 2, 3, 4, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்கு அனகாபுத்துார், ராஜேஸ்வரி திருமண மண்டபம்; ஜன. , 6ல் 65, 66, 67, 68, 69, 70 ஆகிய வார்டுகளுக்கு, இந்திரா நகர் பழனி கல்யாண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. ஜன., 8ல், 39, 40, 41, 42, 34, 43, 44 ஆகிய வார்டுகளுக்கு செம்பாக்கம் மாநகராட்சி சமுதாய நலக்கூடம்; ஜன. , 9ல், 45, 46, 47, 48, 62, 63, 64 ஆகிய வார்டுகளுக்கு சேலையூர், அபிராமி மஹால்; ஜன. , 10ல், 54, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய வார்டுகளுக்கு பழைய பெருங்களத்துார், பத்மாவதி திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.

Tags:    

Similar News