சாலையோரம் இறந்து கிடந்த 2 பேரின் உடல்கள் மீட்பு
சேலத்தில் சாலையோரம் இறந்து கிடந்த இரண்டு ஆண் சடலங்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-28 08:07 GMT
சடலம் மீட்பு
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண் பிணம் மற்றும் செவ்வாய்பேட்டை சண்முகா பாலம் பகுதியில் சுமார் 60 வயதுள்ள ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவர்களது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.